அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இதுவரை ஜாக் நிர்வாகம் சம்மந்தப்பட்ட நிலவரங்களை பொது மக்கள் அறிய முடியாமல் இருந்தார்கள். இன்ஷாஅல்லாஹ் ஜாக் நிர்வாகத்தில் நடைபெறும் சின்ன நிகழ்வுகளை கூட பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பக்கத்தில் செய்திகள் இடம் பெறும். நிர்வாகிகள் நிர்வாக விஷயத்தில் செய்தி தவறான விஷயங்களானும், நல்ல விஷயங்களானாலும் ஆதாரத்துடன் இதில் செய்தி வெளியிடப்படும்.
நிர்வாக விஷயம் அல்லாத நிர்வாகிகளின் தனிப்பட்ட விஷயங்கள் ஆதாரம் இருந்தாலும் இந்த பக்கத்தில் எக்காரணத்தை வெளியிடமாட்டோம். அதற்கு அல்லாஹ்விற்கு அவர்கள் பதில் சொல்லிக்கொள்ள வேண்டியது தான். யாருடைய குறைகளையும் இங்கு துறுவி துறுவி ஆராய்ச்சியும் செய்யமாட்டோம்.
அனைவரும் தாய் ஜமாஅத்தான ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸில் இணைந்து செயல்பட இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் இப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள ஜாக் நிர்வாக செய்திகளையும் நீங்கள் ஆதாரத்துடன் அனுப்பித்தந்தால் நாங்கள் அதை வெளியிடுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தள நிர்வாகி











